Posts

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் பிறந்தநாள்19 Jun 1985 (வயது 34) காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2004-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். பிறப்பு இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால்  என்ற தம்பதியினருக்கு மகளாக 1985-ம் ஆண்டு ஜூன் 19ல் பிறந்துள்ளார். இவருக்கு ஒரு தங்கை உண்டு நிஷா அகர்வால் இவரும் திரைத்துறையில் நடிகையாக நடித்து வருகிறார். தனது கல்வியினை மும்பையிலையே கற்றறிந்த இவர், கல்லூரி காலம் முதல் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். திரைவாழ்க்கை (அறிமுகம் / தொடக்கம்) காஜல் அகர்வால் மும்பையில் பிறந்துள்ள இவர், திரையுலகில் ஆர்வம் கொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் 2004-ம் ஆண்டு ஹிந்தியில் "கியூன்! ஹோ கயா நா" என்ற திரைப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யாவின் தோழியாக நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இத்...

அஞ்சலி

அஞ்சலி பிறந்தநாள்11 Sep 1986 (வயது 32) அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டின் சென்னைக்குச் சென்றார், அங்கு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார்.  தனது கல்வியை முடித்த பின்னர், அவர் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார், இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. அஞ்சலி தனது பெற்றோருக்கு ஒரு நடிகராவதற்கான அபிலாஷைகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் "அவர்களின் கனவுகளை அவர்கள் உணர்ந்தார்கள்" என்றும் குறிப்பிட்டார். அஞ்சலி (Anjali, தெலுங்கு: అ౦జలి) தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்கா...

ஆண்ட்ரியா ஜெறேமியா

ஆண்ட்ரியா ஜெறேமியா பிறந்தநாள்21 Dec 1984 (வயது 34) ஆண்ட்ரியா ஜெறேமியா  பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின. ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார். ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்...

அனுஷ்கா செட்டி

அனுஷ்கா செட்டி பிறந்தநாள்07 Nov 1981 (வயது 37) அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக விளங்குகிறார். நடிகை பாகமதி  - 2018 ( தமிழ் )  பிரமாண்ட நாயகன்  - 2018 ( தமிழ் )  எஸ் 3  - 2017 ( தமிழ் )  பாகுபலி 2  - 2017 ( தமிழ் )  தோழா  - 2016 ( தமிழ் )  பாகுபலி  - 2015 ( தமிழ் )  ருத்ரமாதேவி  - 2015 ( தமிழ் )  என்னை அறிந்தால்  - 2015 ( தமிழ் )  இஞ்சி இடுப்பழகி  - 2015 ( தமிழ் )  லிங்கா  - 2014 ( தமிழ் ) ...

தமன்னா

தமன்னா பிறந்தநாள்21 Dec 1989 (வயது 29) தமன்னா  ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிந்தி இனைத்தைச் சேர்ந்தவர். தமன்னா, சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியாவின் மகள். 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம்மும்பையில், இந்தியாவில்பிறந்தார். அவளுக்கு ஆனந்த் என்ற ஒரு அண்ணன் உண்டு. அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவர் . அவள் சிந்தி வம்சாவழியில் வந்தவர் ஆவர் . அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரை பெயர் மாற்றப்பட்டது. நடிகை பொன் ஒன்று கண்டேன்  - 2019 ( தமிழ் )  கண்ணே கலைமானே  - 2019 ( தமிழ் )  சயீரா நரசிம்ம ரெட்டி...

பாவனா

பாவனா பிறந்தநாள்06 Jun 1986 (வயது 33) பாவனா தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . பின்னர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல தரப்புகளில் பாரட்டுகள் கிடைத்தது. தமிழ் திரையுலகில் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர் இரு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றுள்ளார். அறிமுகம் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டதை சேர்த்தவர் ஆவார். கார்த்திகா மேனன் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், திரையுலகில் பாவனா என்ற பெயர் கொண்டே அறியப்படுகிறார். 16 வயதிலையே கேரளா திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர். இவருக்கு இவர் நடித்த முதல் திரைப்படத்திலையே சிறந்த நடிப்பிற்கான ஜூரி விருதினை கேரளா அரசு வழங்கியுள்ளது. திரைப்படங்கள் பின்னர் 2010-ம் ஆண்டு கன்னட திரையுலகில் ஜாக்கி என்ற திரைப்படத்தில் கன்னட திரையுலக முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமாரின் திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமானவர். கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில்...

நயன்தாரா

நயன்தாரா 18 Nov 1984 (வயது 34) நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். நயன்தாரா தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் இவர் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தர்பார்  - 2020 ( தமிழ் )  நடிகை கொலையுதிர் காலம்  - 2019 ( தமிழ் )  Mr.லோக்கல்  - 2019 ( தமிழ் )  விஸ்வாசம்  - 2019 ( தமிழ் )  காத்துவாக்குல ரெண்டு காதல்  - 2019 ( தமிழ் )  ஐரா  - 2019 ( தமிழ் )  பிகில்  - 2019 ( தமிழ் )  சயீரா நரசிம்ம ரெட்டி  - 2019 ( தமிழ் )  கோலமாவு கோகிலா (கோ கோ)  - 2018 ( தமிழ் )  இமைக்கா நொடிகள்  - 2018 ( தமிழ் )  அறம்  - 2017 ( தமிழ் )  வேலைக்காரன்  - 2017 ( தமிழ் )  ...